சினிமா செய்திகள்

மவுன படத்தில் விஜய் சேதுபதி + "||" + In the silent film Vijay Sethupathi

மவுன படத்தில் விஜய் சேதுபதி

மவுன படத்தில் விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் முதியவர், வில்லன், திருநங்கை போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடிக்கிறார். தற்போது காந்தி டாக்ஸ் என்ற பெயரில் உருவாகும் மவுன படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ல் இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான புஷ்பக விமானா படமே கடைசியாக வெளியான மவுன படம் ஆகும். இந்த படம் தமிழில் பேசும்படம் என்ற பெயரில் வந்தது. 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியில் காந்தி டாக்ஸ் மவுன படம் உருவாகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். படத்தை கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார். அவர் கூறும்போது, “காந்தி டாக்ஸ் உணர்ச்சிகள் நிறைந்த இதயத்துக்கு நெருக்கமான படம். இதில் நாயகனாக நடிக்க இந்தியில் நிறைய நடிகர்களை பரிசீலித்தேன். யாரும் பொருந்தவில்லை. அப்போதுதான் விஜய்சேதுபதியின் நடிப்பு திறமை தெரிந்து அவரை ஒப்பந்தம் செய்தேன்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டாப்சியுடன் இணைந்து விஜய் சேதுபதி, 2 வேடங்களில் நடிக்கிறார்
விஜய் சேதுபதி ஒரு புதிய படத்தில், 2 வேடங்களில் நடிக்கிறார்.
2. வெப் தொடரில் விஜய் சேதுபதி
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் தமிழ், இந்தி, தெலுங்கில் அதிக தொடர்கள் தயாராகின்றன.