சினிமா செய்திகள்

ரஜினி, கமலுடன் நடித்தவர் கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர் + "||" + Rajini, who starred with Kamal Overcame from the corona 98 year old actor

ரஜினி, கமலுடன் நடித்தவர் கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர்

ரஜினி, கமலுடன் நடித்தவர் கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர்
தமிழில் ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் நடித்து பிரபலமானவர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி.
கமல்ஹாசனின் பம்மல் கே.சம்மந்தம், ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங்களிலும் தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறார். 98 வயதாகும் உன்னி கிருஷ்ணனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். உன்னி கிருஷ்ணன் மகன் பவதாசன் கூறும்போது. ‘அப்பா இளம்வயதில் பாடிபில்டராக இருந்தார். உடல்நலத்தை பேணுவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார். அதனால் கொரோனாவை அவர் வென்று இருக்கிறார்' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்னும் 2 வாரங்களில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு முடிகிறது
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனாவால் தாமதம் ஆனது.
2. ரஜினியின் கட்சி: ஆட்டோ சின்னம் தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மையா?
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து வெளியான தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியது.