சினிமா செய்திகள்

குஷ்புவை சந்தித்த விஜய் சேதுபதி + "||" + Met Kushbu Vijay Sethupathi

குஷ்புவை சந்தித்த விஜய் சேதுபதி

குஷ்புவை சந்தித்த விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
முதியவர், வில்லன், திருநங்கை போன்ற கதாபாத்திரங்களில் இமேஜ் பார்க்காமல் நடிப்பதால் அவருக்கு தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிகின்றன. தமிழில் விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், லாபம் படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. மும்பைக்கார் என்ற இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ள விஜய்சேதுபதி அங்கு நடிகையும் பா.ஜனதா செய்தி தொடர்பாளருமான குஷ்புவை சந்தித்து பேசினார். விஜய்சேதுபதியை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘விஜய்சேதுபதி மதிய உணவு சாப்பிட வந்து இருந்தார். அப்போது நிறைய பேசினோம். சாதாரண நாளை ஸ்பெஷலாக மாற்றிய விஜய்சேதுபதிக்கு நன்றி’ என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு- சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தெலுங்கில் மார்க்கெட் பிடித்த விஜய் சேதுபதி
தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கில் வெற்றிபெற்றால் அவர்களின் முந்தைய படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுவது வழக்கம்.
3. சூரிக்கு ‘அப்பா’வாக நடிக்கிறார் விஜய் சேதுபதி!
தற்போதைய கதாநாயகர்களில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்டவர். கதாநாயகனாக நடிப்பதுடன் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.