சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா + "||" + Trisha in Ponniyin Selvan shoot

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா
இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார்.
படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி. பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, குந்தவையாக திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காடுகளில் நடந்தது. பின்னர் புதுச்சேரியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. படப்பிடிப்பில் ஐஸ்வர்யாராய் சமீபத்தில் கலந்து கொண்டார். இப்போது நடிகை திரிஷாவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். கையில் பொன்னியின் செல்வன் நாவலை வைத்திருப்பதை போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டு உள்ளார். 

இந்த படத்தில் நடிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு திரிஷா குதிரையேற்ற பயிற்சி எடுத்தார். குதிரையுடன் நிற்பது போன்ற புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘‘பெயர் மாற்றம் செய்யவில்லை’’ - நடிகை திரிஷா
நடிகை திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், ‘‘நான் பெயர் மாற்றம் செய்யவில்லை’’ என்று திரிஷா கூறுகிறார்.
2. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய்: 10 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், 10 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார்.