சினிமா செய்திகள்

என் ‘இன்ஸ்டாகிராமை’ முடக்கிய ஜோக்கர்கள் நடிகை நஸ்ரியா காட்டம் + "||" + Disabling my Instagram Jokers Actress Nazriya

என் ‘இன்ஸ்டாகிராமை’ முடக்கிய ஜோக்கர்கள் நடிகை நஸ்ரியா காட்டம்

என் ‘இன்ஸ்டாகிராமை’ முடக்கிய ஜோக்கர்கள் நடிகை நஸ்ரியா காட்டம்
நடிகர், நடிகைகள் டுவிட்டர், முகநூல், ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட வலைத்தள பக்கங்களில் கணக்குகள் வைத்து சமூக, அரசியல் கருத்துகள், நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இவற்றில் மர்ம ஆசாமிகள் ஊடுருவி முடக்குவது வழக்கமாக நடக்கிறது. நடிகைகள் குஷ்பு, திரிஷா, ஹன்சிகா, ஊர்வசி ரவுத்தலா, பூஜா ஹெக்டே, அனுபமா பரமேஸ்வரன், வரலட்சுமி, ஷோபனா உள்ளிட்ட பலரது வலைத்தளங்கள் முடக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர். ‘எனது இன்ஸ்டாகிராம் கணக்கை சில ஜோக்கர்கள் முடக்கி விட்டனர். எனவே சில நாட்கள் என்னுடைய கணக்கில் இருந்து வெளியாகும் பதிவுகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம்' என்று நஸ்ரியா கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமை முடக்கியவர்களை ஜோக்கர்கள் என்று நஸ்ரியா காட்டமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.