சினிமா செய்திகள்

குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா + "||" + Khushbu, Poonam Dhillon of the 80s Meeting friends Actress Nadiya

குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா

குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா
தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நதியா. இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன.
ரஜினிகாந்த், மோகன், சத்யராஜ், சிவகுமார், விஜயகாந்த், சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருந்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய நதியா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் திரையுலகுக்கு வந்தார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் நடிகை குஷ்பு, பிரபல இந்தி நடிகை பூனம் தில்லான் ஆகியோரை நதியா சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘80-களின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது' என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கன்டெய்னர்களில் அலுவலக அறைகள்: சினிமா பாணியில் தேர்தல் பணிமனை நடிகை குஷ்பு அசத்தல்
சினிமா பாணியில்,கன்டெய்னர்களில் அலுவலக அறைகள் அமைத்து தேர்தல் பணிமனையை வடிவமைத்து நடிகை குஷ்பு அசத்தி உள்ளார்.
2. 3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்
3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்.
3. பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை திருவையாறில் குஷ்பு பேட்டி
பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என திருவையாறில் குஷ்பு கூறினார்.
4. பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும் நடிகை குஷ்பு பேட்டி
பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என நடிகை குஷ்பு தெரிவித்தார்.
5. குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்
குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்.