சினிமா செய்திகள்

கன்னட பட நடிகை ராகிணி திரிவேதிக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Kannada actress Rakini Trivedi granted bail by Supreme Court

கன்னட பட நடிகை ராகிணி திரிவேதிக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கன்னட பட நடிகை ராகிணி திரிவேதிக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட பிரபல கன்னட மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ராகிணி திவேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
பெங்களூரு,

போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக பிரபல கன்னட மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ராகிணி திவேதி கடந்த ஆண்டு செப்டம்பர் 4ந்தேதி கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னட மற்றும் தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் ராகிணி திவேதியின் நண்பரான ரவி சங்கர், மற்றொரு நடிகையான சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், ஓட்டல் அதிபர் கார்த்திக் ராஜ் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இவர்களில் நடிகை ராகிணி திவேதியின் நண்பரான ரவி சங்கர் பெங்களூரு ஜெயநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராகவும் பணியாற்றி வந்தார். ரவி சங்கர் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததும், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் கைது செய்யப்பட்டார்.  நடிகை ராகிணி திவேதியும், ரவி சங்கரும் திருமணம் செய்து கொள்ளலாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், இதற்காக ராகிணி திவேதிக்கு ரவி சங்கர் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 4ந்தேதி காலை 6.30 மணியளவில் பெங்களூரு எலகங்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நடிகை ராகிணி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது நடிகை ராகிணி திவேதி வீட்டில் தான் இருந்தார். இதையடுத்து, அவர் பயன்படுத்தி வந்த 4 செல்போன்கள், 2 மடிக்கணினிகளை போலீசார் கைப்பற்றினார்கள். அவரது வீட்டில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் ராகிணி திவேதியின் வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலையில் இருந்து மாலை வரை நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, அன்று மாலையில் நடிகை ராகிணி திவேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை ராகிணி திவேதி கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். அவர் கன்னடத்தில் ராகிணி ஐ.பி.எஸ். சிவம், கெம்பேகவுடா, வீரமதகரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

தமிழில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்த நிமிர்ந்து நில் படத்தில் ராகிணி திவேதி கதாநாயகியாக நடித்து பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் லோயம் பெப்பர் சம்பா, வீரேன் கண்ணா, வைபவ் ஷெட்டி, பிரதிக் ஷெட்டி உள்பட 14-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி தாக்கல் செய்த ஜாமீன் மனுவின் அடிப்படையில், நீதிமன்றம் அவரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிட்டது.  அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சஞ்சனா கல்ராணிக்கு  ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நடிகை ராகிணி திரிவேதி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.  இதில், நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருநீர்மலை பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறதா? ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னையை அடுத்த திருநீர்மலையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக வந்த புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் விசாரித்தனர்.
2. திருநீர்மலை பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறதா? ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னையை அடுத்த திருநீர்மலையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக வந்த புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் விசாரித்தனர்.
3. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை டிசம்பர் 14-ந்தேதி கைது செய்தனர்.
4. நில அபகரிப்பில் ஈடுபடும் தொண்டர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
நில அபகரிப்பு செயலில் ஈடுபடும் தொண்டர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
5. இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் சிறப்பு புலன் விசாரணை குழு ஐகோர்ட்டு உத்தரவு
இன்ஸ்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் சிறப்பு புலன் விசாரணை குழுவை அமைக்க தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.