சினிமா செய்திகள்

போதைப் பொருள் வழக்கில் நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் + "||" + In the case of drugs To actress Rakini Dwivedi Bail

போதைப் பொருள் வழக்கில் நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன்

போதைப் பொருள் வழக்கில் நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன்
கன்னட திரையுலகில் சில மாதங்களுக்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர் நடிகைகள் பெயர் பட்டியலை இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் போலீசாரிடம் வழங்கினார். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் கர்நாடக கோர்ட்டில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி உடல்நிலை தொடர்பாக மேல்முறையீடு செய்து கடந்த மாதம் ஜாமீன் பெற்று 3 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

கர்நாடக கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் ராகிணி திவேதி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் நேற்று விசாரித்து ராகிணி திவேதிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.