சினிமா செய்திகள்

ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி + "||" + Hollywood actor death the corona

ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி

ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி
பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர் ரெமி ஜூலியன். இவர் பார் யுவர் ஐஸ் ஒன்லி, எ வியூ டு கில். லைசன்ஸ் டு கில் போன்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சண்டை காட்சிகளை அமைத்து கொடுத்துள்ளார்.
கார் சேஸிங், டேங்கர்கள் மோதல் போன்ற ஆபத்தான சண்டை காட்சிகளை வடிவமைப்பதில் புகழ்பெற்றவராக திகழ்ந்தார். 1400 படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்துள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். ரெமி ஜூலியனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை மோசம் அடைந்ததால் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ரெமி ஜூலியன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் டிரினி லோபஸ், ஆண்ட்ரூ ஜாக், மார்க் பிளம், ஆனல் கார்பீல்டு, ஹாலிவுட் நடிகைகள் பேட்ரிசியா பாஸ்வொர்த், லீ பியர்ரே உள்ளிட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல டி.வி. நடிகை கொரோனாவுக்கு பலி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரம்ம குமாரிகளுக்கான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.