சினிமா செய்திகள்

பா.ஜனதாவில் சேர பிரவீனா முடிவா? + "||" + Join the BJP actress Praveena

பா.ஜனதாவில் சேர பிரவீனா முடிவா?

பா.ஜனதாவில் சேர பிரவீனா முடிவா?
நடிகர், நடிகைகள் பலர் பா.ஜனதா கட்சியில் இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகை குஷ்பு பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழில் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, சசிகுமாரின் வெற்றிவேல், விக்ரமுடன் சாமி 2, ஜெயம்ரவியின் கோமாளி உள்ளிட்ட படங்களிலும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள பிரபல மலையாள நடிகை பிரவீனா பா.ஜனதா கட்சியில் சேரப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் அல்லது கொல்லம் தொகுதியில் பிரவீனா போட்டியிட இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை பிரவீனா மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “என்னை அரசியலில் இழுத்துவிட்ட முகம் தெரியாத அந்த நபருக்கு நன்றி. எனக்கு அரசியல் தெரியாது. அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்ற சிந்தனையும் எனக்கு இல்லை. அரசியலுக்கு வரப்போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை'' என்றார்.