சினிமா செய்திகள்

நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ் + "||" + Rajinikanth's "Annaatthe" release on November 4

நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்

நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்
நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு, டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துக் கொண்டவர்கள் சிலருக்கு கொரோன தொற்று உறுதியானதால் மீண்டும் தடைப்பட்டது.

இந்நிலையில், அண்ணாத்த படக்குழுவினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில், வரும் நவம்பர் 4-ஆம் தேதி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். இந்த வருட இறுதியில் தான் படம் வெளிவரும் என்று செய்தியை அறிந்த ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.