பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு + "||" + Announcement of Padma Vibhushan Award to Famous movie playback singer late S.P. Balasubramaniam
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேர் கொண்ட பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
இதன்படி, பொது விவகார துறைக்காக ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கலை பிரிவில் தமிழகத்தில் இருந்து பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மருத்துவ பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த பெல்லி மொனப்பா ஹெக்டே, அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த நரீந்தர் சிங் கப்பானி (மறைவுக்கு பின்) வழங்கப்படுகிறது.
இதேபோன்று பிற பிரிவுகளில் ஆன்மீகத்திற்காக டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹிதுதீன் கான், தொல்லியல் துறைக்காக டெல்லியை சேர்ந்த பி.பி. லால் மற்றும் கலை பிரிவில் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் சாஹூ ஆகியோரும் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.