சினிமா செய்திகள்

திகில் தொடரில் காஜல் அகர்வால் + "||" + Kajal Agarwal in the horror series

திகில் தொடரில் காஜல் அகர்வால்

திகில் தொடரில் காஜல் அகர்வால்
முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். சூர்யாவும் வெப் தொடரில் நடிக்கிறார். தற்போது காஜல் அகர்வாலும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் வைபவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தொடரை வெங்கட்பிரபு இயக்குகிறார்.
தொடருக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்' என்று பெயர் வைத்துள்ளனர். பேய் கதையம்சம் உள்ள தொடராக தயாராகிறது. காஜல் அகர்வால் பேயாக வருகிறார். 

இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும்போது, “சமீப காலமாக வெப் தொடர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகர,் நடிகைகள் பலரும் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். நானும் வெப் தொடரில் நடிக்கிறேன். 10 தொடர்களாக இது வெளிவரும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துவிட்டேன். சவாலான விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருக்கிறேன்'' என்றார். 

இந்த வெப் தொடரின் முதல் எபிசோட் அடுத்த மாதம் 12-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து காஜல் அகர்வால் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேய் வேடத்தில் நடிக்க 4 மணி நேரம் ‘மேக்கப்’ போட்ட காஜல் அகர்வால்
‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான காஜல் அகர்வால், ஏறக்குறைய எல்லா பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.
2. ஆஸ்துமா அவதியில் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கைவசம் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2. பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.
3. பேய் கதையில் காஜல் அகர்வால்
பேய் கதையில் காஜல் அகர்வால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.