மோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்


மோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்
x
தினத்தந்தி 27 Jan 2021 12:20 AM GMT (Updated: 27 Jan 2021 12:20 AM GMT)

கொரோனாவால் நிறைய படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. அதையும் மீறி வரும் படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. முடங்கிய படங்கள் பட்டியலில் மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கமும் இடம்பெற்றுள்ளது.

கொரோனாவால் நிறைய படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. அதையும் மீறி வரும் படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. முடங்கிய படங்கள் பட்டியலில் மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கமும் இடம்பெற்றுள்ளது. சரித்திர கதையம்சம் உள்ள இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். அசோக் செல்வன், அர்ஜுன், மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், சுகாசினி ஆகியோரும் உள்ளனர். இந்த படம் கடந்த வருடம் மார்ச் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனாவால் வெளியாகவில்லை. இதையடுத்து வருகிற மார்ச் மாதம் படம் வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால் தற்போது மீண்டும் படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளர். ஆகஸ்டு மாதம் ஓணம் பண்டிகையில் வெளியாகும் என்று தெரிகிறது. இது மோகன்லால் ரசிகர்களூக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story