சினிமா செய்திகள்

வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம் + "||" + Diamond interpretation of the Vail controversy

வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்

வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியலில் வேல் முக்கிய விவாதமாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியலில் வேல் முக்கிய விவாதமாகி உள்ளது. தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் சமீபத்தில் வேல் யாத்திரை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். சில இடங்களில் தடையை மீறியும் வேல் யாத்திரை நடந்தது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிகழ்ச்சியொன்றில் தொண்டர்கள் வேல் வழங்கினார்கள். வேலை அவர் கையில் பிடித்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்தார்.


இந்த நிலையில் வேல் குறித்து கவிஞர் வைரமுத்து புதிய விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வேல் என்பது கடவுளின் கைப்பொருள் மட்டுமல்ல. இரும்பு காலத்தில் மனிதன் கண்டறிந்த வேட்டைக்கருவிகளுள் ஒன்று வேல். தமிழர்களின் ஆதி ஆயுதம் வேல். அது வேட்டைக்கு உரியது. வழிபாட்டுக்கும் உரியது. போருக்கும் உரியது மற்றும் யாருக்கும் உரியது'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. போலி இ மெயில் வழக்கு: காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஹிருத்திக் ரோஷன் நேரில் ஆஜராகி விளக்கம்
போலி இ மெயில் வழக்கு விவகாரத்தில் மும்பை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஹிருத்திக் ரோஷன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
2. 3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்
3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்.
3. எரிபொருள் விலை உயர்வுக்கு 2 காரணங்கள்: மத்திய மந்திரி விளக்கம்
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான 2 காரணங்களை மத்திய பெட்ரோலிய துறை மந்திரி விளக்கம் தெரிவித்து உள்ளார்.
4. கொரோனா தொற்றால் மூடப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 11 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.
5. கொரோனா தொற்றால் மூடப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 11 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.