சினிமா செய்திகள்

ஆர்யாவின் 400 கி.மீ. தூர சைக்கிள் பயணம் + "||" + 400 km from Arya. Long-distance cycling

ஆர்யாவின் 400 கி.மீ. தூர சைக்கிள் பயணம்

ஆர்யாவின் 400 கி.மீ. தூர சைக்கிள் பயணம்
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அத்துடன் சைக்கிள் பந்தய வீரராகவும் இருக்கிறார்.
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அத்துடன் சைக்கிள் பந்தய வீரராகவும் இருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று உள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் 100 கி.மீ. வரை சைக்கிள் பயணம் செய்ததாக கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது 400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்யாவின் சைக்கிள் பயண சாதனையை நடிகர் விவேக்கும் டுவிட்டரில் பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆர்யா, உங்களின் 400 கி.மீ. சைக்கிள் பயணத்துக்கு வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர்களுக்கும் உந்துதலாக இருக்கிறீர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். விவேக் பாராட்டுக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
குமரி மாவட்டத்தில், தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.
2. சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது
சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.
3. வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்: வடசென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது
மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
4. வாக்காளர் தினத்தையொட்டி சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி கலெக்டர் அரவிந்த் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
5. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கம்; 30 ஆயிரம் பேர் பயணம்
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக நேற்று சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.