சினிமா செய்திகள்

மகள் பிறந்தநாளை கொண்டாடிய சினேகா + "||" + Sneha celebrates daughter's birthday

மகள் பிறந்தநாளை கொண்டாடிய சினேகா

மகள் பிறந்தநாளை கொண்டாடிய சினேகா
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்று பட்டம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் 2012-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்று பட்டம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் 2012-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே விஹான் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சினேகா மீண்டும் கர்ப்பமாகி கடந்த வருடம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளார். ஆத்யந்தாவின் முதல் பிறந்த நாளை சினேகாவும், பிரசன்னாவும் சென்னையில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்கள். இதில் நடிகை மீனா தனது மகள் நைனிகாவுடன் கலந்து கொண்டு குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தார். பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் 68-வது பிறந்தநாளை கொண்டாடினார் ராகுல்காந்தி, ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து
மு.க.ஸ்டாலின் தனது 68-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து வாழ்த்து பெற்றார். அவருக்கு ராகுல்காந்தி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.