சினிமா செய்திகள்

பிரபுதேவா ஜோடி ரம்யா நம்பீசன் + "||" + Prabhu Deva couple Ramya Nambeesan

பிரபுதேவா ஜோடி ரம்யா நம்பீசன்

பிரபுதேவா ஜோடி ரம்யா நம்பீசன்
பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
பிரபுதேவா நடித்து கடந்த வருடம் பொன்மாணிக்கவேல் படம் ரிலீசானது. இது அவருக்கு 50-வது படம். தற்போது தேள், யங் மங் சங் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இந்தியில் முன்னணி டைரக்டராகவும் இருக்கிறார். ஏற்கனவே சல்மான்கான் நடித்த வாண்டட், தபாங் 3, அக்‌ஷய்குமாரின் ரவுடி ரத்தோர், அஜய்தேவ்கானின் ஆக்‌ஷன் ஜாக்சன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது மீண்டும் சல்மான்கான் நடிப்பில் ராதே படத்தை இயக்கி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால் திரைக்கு வருவதில் தாமதமாகி உள்ளது. இந்த நிலையில் பிரபுதேவா தமிழில் அடுத்து என்.ராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஸ்வந்த் நடிக்கிறார். ரம்யா நம்பீசன் ஏற்கனவே ஒரு நாள் ஒரு கனவு, ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மேலும் 6 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.