கிரிக்கெட் பயிற்சியில் நடிகை டாப்சி


கிரிக்கெட் பயிற்சியில் நடிகை டாப்சி
x

பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. அவரது வேடத்தில் நடிக்கும் டாப்சி தற்போது கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார்.

விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை கதைகள் சினிமா படங்களாகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி வாழ்க்கையை ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரிலும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை ‘சச்சின் பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரிலும் படமாக்கி வெளியிட்டனர். 

குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கையும் படமாக வந்தது. அடுத்து பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. மிதாலி ராஜ் வாழ்க்கை படத்தில் அவரது வேடத்தில் டாப்சி நடிக்கிறார். டாப்சி கூறும்போது, “இந்திய பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் மிதாலி ராஜ் பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். 

அவரது வாழ்க்கை கதையில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது” என்றார். இந்த படத்தில் நடிக்க டாப்சி தற்போது கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story