ஆன்லைன் ரம்மி விளையாட்டு தூதுவர் நடிகை தமன்னாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ்


ஆன்லைன் ரம்மி விளையாட்டு தூதுவர் நடிகை தமன்னாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ்
x

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தூதுவர் நடிகை தமன்னாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட உள்ளனர்.

ஆன்லைன் ரம்மி என்ற இணையதள சூதாட்ட விளையாட்டுக்கு பலர் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தடை விதித்துள்ளனர். கேரளாவிலும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க கோரி திருச்சூரை சேர்ந்த பாலி வடக்கன் என்பவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இது சூதாட்டம் ஆகும். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த விளையாட்டுக்கு தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடும்படி தூண்டுகின்றனர்' என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேரள அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதுபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தூதுவர்களான நடிகை தமன்னா, மலையாள நடிகர் அஜூ வர்கீஸ், கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட உள்ளனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story