சினிமா செய்திகள்

5 மொழி படத்தில் சுருதிஹாசன் + "||" + Surudihasan in 5 language film

5 மொழி படத்தில் சுருதிஹாசன்

5 மொழி படத்தில் சுருதிஹாசன்
நடிகர் பிரபாஸ் அடுத்து நடிக்கும் 5 மொழிகளில் தயாராகும் சலார் என்ற படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.
பாகுபலி படம் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ் அடுத்து 5 மொழிகளில் தயாராகும் சலார் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் தயாராகி பல மொழிகளில் வெளியிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமானவர். தெலுங்கில் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாராகும் சலார் படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இதில் கதாநாயகியாக நடிக்க இந்தி நடிகை திஷா பதானியிடம் பேசி வந்தனர். கால்ஷீட் இல்லாததால் அவரால் நடிக்க முடியவில்லை.

எனவே அவருக்கு பதிலாக நடிப்பது யார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது சுருதிஹாசனை தேர்வு செய்து இருப்பதாக அறிவித்து உள்ளனர். சலார் படத்தில் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் ஜான் அபிரகாமை பரிசீலித்தனர்.

தற்போது அவருக்கு பதிலாக மாஸ்டர் படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய்சேதுபதியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.