சினிமா செய்திகள்

விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் நள்ளிரவு ஓடிடி தளத்தில் வெளியானது + "||" + OTT Release of Thalpathy Vijay’s Film

விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் நள்ளிரவு ஓடிடி தளத்தில் வெளியானது

விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் நள்ளிரவு ஓடிடி தளத்தில் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் நள்ளிரவு ஓடிடி தளத்தில் வெளியானது.

விஜய்யின் மாஸ்டர் படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகையில் திரையரங்குகளில் வெளியிட்டனர். ரசிகர்கள் அதிக அளவில் தியேட்டர்களில் வந்து மாஸ்டர் படத்தை பார்த்தனர். 

நல்ல வசூலும் ஈட்டியது. அடுத்து மாஸ்டர் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிக்கபட்டது.  இதன்படி, மாஸ்டர் திரைப்படம் நள்ளிரவு ஒடிடியில் வெளியானது.  தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் வரும். ஆனால் மாஸ்டர் 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் வெளியாவது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் வந்தனர். கொரோனாவால் ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவி நடித்துள்ள பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின் உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்யின் 66-வது படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது.
2. விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.?
ஒரே படத்தில் இரண்டு முன்று கதாநாயகர்கள் இணைந்து நடிப்பதை இந்தி பட உலகில் சகஜமாக காண முடியும். தமிழ் திரையுலகில் ஏற்கனவே இந்த முறை இருந்துள்ளது.
3. விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடி சம்பளம்?
மாஸ்டர் படத்துக்கு பிறகு சில வாரங்கள் ஓய்வில் இருந்த விஜய் இப்போது புதிய படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார்.
4. விஜய் நடிக்கும் 3 படங்கள்
விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது. அடுத்து 3 படங்களில் அவர் தொடர்ந்து நடிப்பது உறுதியாகி உள்ளது.
5. விஜய் மக்கள் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
விஜய் மக்கள் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.