சினிமா செய்திகள்

மிரட்டல்-ரசிகர்கள் தொல்லையால் பாதுகாப்பு படையினருடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகைகள் + "||" + Intimidation Fans harass With security forces Actresses coming to the shoot

மிரட்டல்-ரசிகர்கள் தொல்லையால் பாதுகாப்பு படையினருடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகைகள்

மிரட்டல்-ரசிகர்கள் தொல்லையால் பாதுகாப்பு படையினருடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகைகள்
கங்கனா ரணாவத், தீபிகா படுகோன் ஆகிய இருவரை தொடர்ந்து, ‘பாதுகாப்பு படை கலாசாரம்’ தென்னிந்திய நடிகைகள் மத்தியிலும் பரவி இருக்கிறது.
சில நடிகைகள் பாதுகாப்பு படையினருடன் படப்பிடிப்புக்கு வருகிறார்கள். அந்த பாதுகாப்பு படையினருக்கான செலவுகளையும் தயாரிப்பாளர்களே ஏற்கிறார்கள். இந்த கலாசாரம் மும்பையில் தொடங்கியது. நடிகை ஐஸ்வர்யாராய் ஆரம்பித்து வைத்தார். இவர் படப்பிடிப்புக்கு வரும் போதெல்லாம் கூடவே பாதுகாவலர்களும் வருகிறார்கள்.

இவரை தொடர்ந்து கங்கனா ரணாவத், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் பாதுகாவலர்களுடன் படப்பிடிப்பு களுக்கு வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதால், பாதுகாப்புக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்களாம்.

கங்கனா ரணாவத், தீபிகா படுகோன் ஆகிய இருவரை தொடர்ந்து, ‘பாதுகாப்பு படை கலாசாரம்’ தென்னிந்திய நடிகைகள் மத்தியிலும் பரவி இருக்கிறது. நயன்தாராவுடன் பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் படப்பிடிப்புகளுக்கு வருகிறார்கள். இவர்களுக்கான செலவுகளையும் தயாரிப்பாளர்களே ஏற்கிறார்கள். அந்த வகையில், தயாரிப்பாளர்களுக்கு தினமும் ரூ.1.50 லட்சம் கூடுதல் செலவு ஆகிறதாம்.

நயன்தாராவைப்போல் பாதுகாப்பு படையினருடன் படப்பிடிப்புகளுக்கு வரும் இன்னொரு நடிகை, சமந்தா. இவர், 6 பாதுகாவலர்களுடன் வருகிறார். இவர்கள் இருவருக்கும் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இவர்கள் இரண்டு பேரும் போகிற இடமெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரள்கிறதாம்.

ரசிகர்கள் செய்யும் குறும்புகளை வெளியே சொல்ல முடியவில்லையாம். அந்த அளவுக்கு இன்ப தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உதவியாளர்கள் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
திட்டக்குடி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. மும்பை தாராவியை மீண்டும் மிரட்டும் கொரோனா ஆறு மாதங்களில் இல்லாத அளவில் பாதிப்பு உயர்வு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அங்கு ஆறு மாதங்களில் இல்லாத அளவில் பாதிப்பு உயர்ந்துள்ளது.
3. தற்கொலை மிரட்டல் விடுத்த மக்கள் நலப்பணியாளர்
தற்கொலை மிரட்டல் விடுத்த மக்கள் நலப்பணியாளர்