சினிமா செய்திகள்

‘தளபதி 65’ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் உலக அழகி + "||" + Thalapathi 65 in the picture The couple will join Vijay Miss World beauty

‘தளபதி 65’ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் உலக அழகி

‘தளபதி 65’ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் உலக அழகி
விஜய்யின் புதிய படத்துக்கு தற்காலிகமாக, ‘தளபதி-65’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
விஜய் நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த ‘மாஸ்டர்,’ அவருடைய 64-வது படம். இதையடுத்து அவர் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன் டைரக்டு செய்கிறார். இவர் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தை டைரக்டு செய்தவர்.

இந்தப் படத்துக்கு தற்காலிகமாக, ‘தளபதி-65’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஜய்க்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடிப்பார் என்று பேசப்படுகிறது. இவர், 2010-ம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில், மூன்றாவது இடத்தை பிடித்தவர். ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நடித்து இருந்தார். சில வருட இடை வெளிக்குப்பின் மீண்டும் அவர் தமிழ் பட உலகுக்கு வருகிறார்.