சினிமா செய்திகள்

சூரிக்கு ‘அப்பா’வாக நடிக்கிறார் விஜய் சேதுபதி! + "||" + Vijay Sethupathi plays Dad role for actor suri

சூரிக்கு ‘அப்பா’வாக நடிக்கிறார் விஜய் சேதுபதி!

சூரிக்கு ‘அப்பா’வாக நடிக்கிறார் விஜய் சேதுபதி!
தற்போதைய கதாநாயகர்களில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்டவர். கதாநாயகனாக நடிப்பதுடன் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.
‘தென் மேற்கு பருவக்காற்று’ படத்தில் சராசரி கதாநாயகனாக அறிமுகமான இவர், படத்துக்கு படம் வளர்ந்து வந்த நிலையில், ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில், வயதான ‘அப்பா’ வேடத்தில் நடித்தார்.

விஜய் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘மாஸ்டர்’ படத்தில், வில்லனாக நடித்தார். இதைத்தொடர்ந்து அவர் மேலும் ஒரு படத்தில், ‘அப்பா’ வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, வெற்றிமாறன் டைரக்டு செய்கிறார். சூரிக்கு ‘அப்பா’வாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அப்பா வேடத்தில், முதலில் டைரக்டர் பாரதிராஜா நடிப்பதாக இருந்தார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அதில் கலந்து கொள்ள பாரதிராஜாவும் ஊட்டிக்கு சென்றார். அங்கு குளிர் கடுமையாக இருந்தது. பாரதிராஜாவினால் அந்த குளிரை தாங்க முடியவில்லை. ‘‘என்னால் இந்த குளிரை தாங்கிக்கொண்டு நடிக்க முடியாது’’ என்று கூறிவிட்டு, அவர் சென்னை திரும்பி விட்டார்.

அவர் நடிக்க இருந்த ‘அப்பா’ வேடத்தில், விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிசாசு 2-ம் பாகம் பேய் படத்தில் விஜய் சேதுபதி
மிஷ்கின் இயக்கத்தில் 2014-ல் வெளியான பிசாசு பேய் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் எடுத்து வருகிறார். இதில் பூர்ணா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா பேயாக வருகிறார்.
2. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு- சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.