கொரோனா சிகிச்சை பெற்ற சினிமா பின்னணி பாடகர் மரணம்


கொரோனா சிகிச்சை பெற்ற சினிமா பின்னணி பாடகர் மரணம்
x
தினத்தந்தி 2 Feb 2021 1:53 AM GMT (Updated: 2 Feb 2021 1:53 AM GMT)

கொரோனா சிகிச்சை பெற்ற சினிமா பின்னணி பாடகர் மரணம்.

பிரபல மலையாள சினிமா பின்னணி பாடகர் சோமதாஸ். இவர் கேரள மாநிலம் கொல்லம் அருகில் உள்ள சாத்தனூரில் வசித்தார். மலையாள படங்களில் பல பாடல்கள் பாடி இருக்கிறார். மேடை கச்சேரிகள், வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் பாடல்கள் பாடி வந்தார்.

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் புகழ் பெற்றார். சோமதாசுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை தேறி வந்தது. இதையடுத்து அவரச சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் அவரது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42. மரணம் அடைந்த சோமதாசுக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story