சினிமா செய்திகள்

ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே 2-ம் பாகம் + "||" + Part 2 of Rajkiran's My Rasa's Mind

ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே 2-ம் பாகம்

ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே 2-ம் பாகம்
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண், மீனா ஜோடியாக நடித்து 1991-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் 'என் ராசாவின் மனசிலே'.
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண், மீனா ஜோடியாக நடித்து 1991-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் 'என் ராசாவின் மனசிலே'. இந்த படத்தில்தான் வடிவேலுவை நடிகராக ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார். இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற குயில் பாட்டு, பாரிஜாத பூவே, பெண் மனசு ஆழம் என்று, போடா போடா புண்ணாக்கு, சோல பசுங்கிளியே ஆகிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

என் ராசாவின் மனசிலே 2-ம் பாகத்தை எடுக்கப்போவதாக ராஜ்கிரண் தற்போது அறிவித்து உள்ளார். இதுகுறித்து ராஜ்கிரண் வெளியிட்டுள்ள அறிக்கையில். “எனது மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்து விட்டு திரைக்கதையை எழுதி கொண்டிருக்கிறார். அவரே இந்த படத்தை இயக்கவும் செய்கிறார்'' என்று கூறியுள்ளார். எந்திரன், விஸ்வரூபம், சாமி, சண்டகோழி, பில்லா, அரண்மனை, தில்லு முல்லு, சென்னை 28, வேலை இல்லா பட்டதாரி, மாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்கள் வந்தது. அந்த வரிசையில் ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகம் தயாராகிறது.