சினிமா செய்திகள்

பிரபாஸ்-சுருதிஹாசன் படப்பிடிப்புக்கு மிரட்டல் - 40 போலீசார் பாதுகாப்பு + "||" + Prabhas-Surudihasan shooting threat - 40 police security

பிரபாஸ்-சுருதிஹாசன் படப்பிடிப்புக்கு மிரட்டல் - 40 போலீசார் பாதுகாப்பு

பிரபாஸ்-சுருதிஹாசன் படப்பிடிப்புக்கு மிரட்டல் - 40 போலீசார் பாதுகாப்பு
பிரபாஸ்-சுருதிஹாசன் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் அவர்கள் மூலம் படப்பிடிப்பு குழுவினருக்கு மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.
பாகுபலி படம் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ் அடுத்து 5 மொழிகளில் தயாராகும் சலார் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இதில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

படக்குழுவினர் ஆரம்பத்தில் கோலார் தங்க வயல் பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர். தற்போது தெலுங்கானாவில் உள்ள கோதாவரைகனியில் உள்ள நிலக்கரி சுரங்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் அவர்கள் மூலம் படப்பிடிப்பு குழுவினருக்கு மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்படுகிறது. பிரபாஸ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் போலீஸ் கமிஷனரை சந்தித்து பாதுகாப்பு கேட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் 40 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.