சினிமா செய்திகள்

விவசாயிகளை ஆதரித்த அமெரிக்க பாடகியை முட்டாள் என்ற கங்கனா + "||" + Supported farmers American singer Kangana of the idiot

விவசாயிகளை ஆதரித்த அமெரிக்க பாடகியை முட்டாள் என்ற கங்கனா

விவசாயிகளை ஆதரித்த அமெரிக்க பாடகியை முட்டாள் என்ற கங்கனா
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தை நடிகை கங்கனா ரணாவத் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார்.
குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை மற்றும் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் கொடி ஏற்றிய சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த போராட்டத்தை ஆதரித்தும் கண்டித்தும் வலைத்தளத்தில் பலர் கருத்து பதிவிட்டனர். இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்தியை பகிர்ந்து இந்த போராட்டம் பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த பதிவு உலக அளவில் வைரலானது. உலக டிரெண்டிங்கிலும் இடம்பிடித்தது.

ரிஹானாவின் பதிவை நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். கங்கனா வெளியிட்ட பதிவில், ''விவசாயிகள் போராட்டம் பற்றி யாரும் பேசப்போவது இல்லை. காரணம் அவர்கள் விவசாயிகளே அல்ல. அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த முயலும் பயங்கரவாதிகள். இதனால் பாதிப்பில் இருக்கும் எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமித்து காலனி நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அமைதியாக இரு முட்டாளே. உங்களைப்போல் நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல'' என்று கூறியுள்ளார். கங்கனாவின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.