சினிமா செய்திகள்

‘ஜகமே தந்திரம்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தனுஷ் எதிர்ப்பு + "||" + Jagame Thandhiram movie Publish in OTT Dhanush protests

‘ஜகமே தந்திரம்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தனுஷ் எதிர்ப்பு

‘ஜகமே தந்திரம்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தனுஷ் எதிர்ப்பு
தியேட்டர்களை திறந்த பிறகும் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு தொடர்கிறது.
சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின் உள்ளிட்ட பல படங்கள் ஏற்கனவே ஓ.டி.டி தளத்தில் வந்துள்ளன.

சமீபத்தில் ஜெயம் ரவியின் பூமி படம் ஓ.டி.டியில் வெளியானது. இந்த வரிசையில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தையும் ஓ.டி.டியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஜகமே தந்திரம் படத்துக்கு ஓ.டி.டி தளம் அதிக விலை கொடுக்க முன்வந்து இருப்பதாகவும் இதனால் ஓ.டி.டியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. ஆனால் தனுஷ் இதை விரும்பவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கும் தனுசுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.