சினிமா செய்திகள்

ரசிகர்களின் சேட்டையை ரசிக்கும் நடிகை ; டுவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகா மோகனன் + "||" + I’m a little late to my own meme-fest, but this is hilarious guys- malavika mohanan

ரசிகர்களின் சேட்டையை ரசிக்கும் நடிகை ; டுவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகா மோகனன்

ரசிகர்களின் சேட்டையை ரசிக்கும் நடிகை  ; டுவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகா மோகனன்
என்னைப் பார்த்து நானே சிரிக்காவிட்டால் எப்படி? ரசிகர்களின் சேட்டையை ரசிக்கும் நடிகை மாளவிகா மோகனன்
சென்னை

விஜயின் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக இல்லை என்றாலும், கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாநாயகியாக மாளவிகா  வருகிறார். அவர் கொடுத்த சில எக்ஸ்பிரஷன்கள் அருமையாக இருந்தன.

அவற்றை ரசித்த பலரும், மாளவிகாவின் எக்ஸ்பிரஷன்களை மீம்ஸ்களாக வெளியிட்டு ரசித்தனர். மாளவிகா மோகனன், விஜயிடம் கோபமாக பேசும் காட்சியில் மாளவிகாவின் நடிப்பு அருமையாக இருந்தது. அதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் உருவாகி சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

அந்த மீம்ஸ்களை ரசித்து   டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மாளவிகா மோகனன், மீம்ஸ்களை லேட்டாக பார்த்தாலும், லேட்டஸ்டாக,  நகைச்சுவையாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.

என்னை நன்றாகச் சிரிக்க வைத்த, எனக்குப் பிடித்தமான சில மீம்ஸை நான் பகிர்கிறேன் என்று சொல்லி அவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மாளவிகா. என்னைப்   பார்த்து என்னால் சிரிக்க முடியாவிட்டால் வாழ்க்கை மிகவும் போர் அடிக்கும் இல்லையா?" என கேள்வியையும் கேட்ட மாளவிகாவின் பாஸிடிவ் குணாதிசயம் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருப்பதோடு, மாளவிகாவின் ரசிகர்களாக பலரை மாற்றியும் விட்டது.
தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நடிகை பலி
கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த பிரபல குணசித்திர நடிகை பலியானார்.
2. மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவில்லை
3. டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல்!
டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
4. 93 வது ஆஸ்கார் விருதுகள்...3 விருதுகளை வென்ற திரைப்படம் ; முழு விபரம்
93 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.
5. விடைபெற்றார் விவேக்: நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம்
நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.