சினிமா செய்திகள்

சூர்யா சொந்த படத்தில் 2 கதாநாயகிகள் + "||" + 2 heroines in Surya's own film

சூர்யா சொந்த படத்தில் 2 கதாநாயகிகள்

சூர்யா சொந்த படத்தில் 2 கதாநாயகிகள்
சூர்யா சொந்த படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்கிறார்.
நடிகர் சூர்யாவின் 2டி பட நிறுவனம் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வருகிறது. ‘36 வயதினிலே’ படம் தொடங்கி, ‘சூரரைப் போற்று’ படம் வரை 13 படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் 14-வது தயாரிப்பில் ரம்யா பாண்டியன் கதைநாயகியாக நடிக்கிறார். மித்துன் மாணிக்கம் கதாநாயகனாக அறி முகம் ஆகிறார்.

‘தெய்வமகள்’ என்ற டி.வி. தொடரில் நடித்து பிரபலமான வாணி போஜன், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டைரக்டராக அரிசில் மூர்த்தி அறிமுகமாகிறார். சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணை தயாரிப்பில் படம் வளர்கிறது.