சினிமா செய்திகள்

லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 19-வது படம், ‘டான்’ + "||" + Sivakarthikeyan's 19th film, 'Dawn', produced by Leica Productions

லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 19-வது படம், ‘டான்’

லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 19-வது படம், ‘டான்’
லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 19-வது படத்தின் பெயர் ‘டான்’.
சிவகார்த்திகேயன், ‘டாக்டர்’, ‘அயலான்’ ஆகிய 2 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படங்கள் திரைக்கு வர தயாரான நிலையில், அவருடைய அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தின் பெயர், ‘டான்’. இதில் கதாநாயகியாக நடிப்பவர், பிரியங்கா மோகன். டைரக்டர் அட்லியிடம், ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 2 படங்களிலும் உதவி டைரக்டராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

லைகா புரொடக் ஷன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

‘டான்’ படத்தை பற்றி சுபாஸ்கரன் அல்லிராஜா கூறுகையில், ‘‘சிவகார்த்திகேயன் நடிக்கும் 19-வது படம், இது. படத்துக்கு படம் தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி செல்லும் அவர், இந்த படத்துக்குப்பின் மேலும் ஒரு படி உயர்வார். ரசிகர்களுக்கு இது ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும்’’ என்கிறார்.