சினிமா செய்திகள்

காதலில் பிகில் பட நடிகை + "||" + Bigil movie actress in love

காதலில் பிகில் பட நடிகை

காதலில் பிகில் பட நடிகை
காதலில் பிகில் பட நடிகை ரெபா மோனிகா தற்போது காதலில் விழுந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழில் ஜெய் ஜோடியாக ஜருகண்டி படத்தில் நடித்தவர் ரெபா மோனிகா. தொடர்ந்து விஜய்யின் பிகில் படத்தில் திராவகம் வீச்சில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையாக நடித்து மேலும் பிரபலமானார். ஹரிஷ் கல்யாணுடன் தனுஷ் ராசி நேயர்களே படத்திலும் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பெங்களூருவை சேர்ந்தவரான ரெபா மோனிகா தற்போது காதலில் விழுந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இவருக்கும், ஜோமோன் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த சில வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். சமீபத்தில் துபாய் சென்றபோது ஜோமோன் காதலை வெளிப்படுத்த ரெபா ஏற்றுக்கொண்டார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். ஜோமோன் கூறும்போது, “கொரோனா ஊரடங்கினால் 6 மாதங்களாக ரெபாவை சந்திக்க முடியவில்லை. தற்போது அவரை நேரில் சந்தித்ததும் காதலை தெரிவித்தேன்'' என்றார். ரெபாவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.