சினிமா செய்திகள்

விவசாயிகள் போராட்டம்: ஜி.வி.பிரகாஷ், சோனாக்சி ஆதரவு + "||" + Farmers' Struggle: GV Prakash, Sonakshi support

விவசாயிகள் போராட்டம்: ஜி.வி.பிரகாஷ், சோனாக்சி ஆதரவு

விவசாயிகள் போராட்டம்: ஜி.வி.பிரகாஷ், சோனாக்சி ஆதரவு
விவசாயிகள் போராட்டத்திற்கு ஜி.வி.பிரகாஷ், சோனாக்சி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு நடிகர், நடிகைகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். போராட்டத்துக்கு வெளிநாட்டு நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. மக்கள் நலனை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளும்படி விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம். மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதும் ஜனநாயகம்தான். அவர்கள் ஏர்முனை கடவுள் என்றழைத்தால் மட்டுமே நம்மை படைத்தவனும் மகிழ்வான்'' என்று கூறியுள்ளார்.

நடிகை சோனாக்சி சின்ஹா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “இணையம் தடை செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றனர். வெறுப்பு பேச்சுகள் அதிகமாகிறது. இதுவே சர்வதேச அளவில் இந்த பிரச்சினை கவனிக்கப்படுவதற்கு காரணம். நம் நாட்டு பிரச்சினையில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதாக கருத வேண்டாம். மனிதர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் சக மனிதர்களாக அவர்களை பாருங்கள்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுசின் 43-வது படம்
தனுஷ் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இந்தியில் அந்த்ரங்கி ரே படத்தில் நடித்தார்.