சினிமா செய்திகள்

மீண்டும் பிரபல காதல் ஜோடி இணைந்து நடிக்கிறார்கள் + "||" + Once again the famous romantic couple are acting together

மீண்டும் பிரபல காதல் ஜோடி இணைந்து நடிக்கிறார்கள்

மீண்டும் பிரபல காதல் ஜோடி இணைந்து நடிக்கிறார்கள்
மீண்டும் பிரபல காதல் ஜோடி எஸ்.டி.ஆர். என்கிற சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள்.
எஸ்.டி.ஆர். என்கிற சிம்புவும், நயன்தாராவும் ‘வல்லவன், இது நம்ம ஆளு’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்தார்கள். ‘வல்லவன்’ படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் நெருங்கிப்பழகினார்கள்.

இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானது. அதைத்தொடர்ந்து சிம்புவுடனான காதலை நயன்தாரா முறித்துக்கொண்டார். பின்னர் அவர் பிரபுதேவா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவர் மீதும் காதல் வளர்த்தார். சிம்புவின் காதல் ஹன்சிகா பக்கம் திரும்பியது. பிறகு அந்த காதலும் முறிந்து போனது.

கடந்த ஒரு வருடமாக சிம்புவின் கவனம் திரிஷா பக்கம் திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரும், நயன்தாராவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையப்போவதாக பேசப்படுகிறது. அவ்வப்போது காதலை மாற்றிக்கொள்வது, சினிமா உலகில் புதுசு அல்ல. ரொம்ப சகஜம்!