சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோகன்லால்-மீனா + "||" + Mohanlal-Meena caused anticipation

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோகன்லால்-மீனா

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோகன்லால்-மீனா
‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் உருவானது. மோகன்லால்-மீனா இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
மோகன்லால்-மீனா நடித்த ‘திரிஷ்யம்’ (மலையாள) படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்தது. இதே படம் தமிழில், ‘பாபநாசம்’ என்ற பெயரில் கமல்ஹாசன்-கவுதமி நடித்து வெளிவந்தது. ‘திரிஷ்யம்’ படத்தைப்போல் ‘பாபநாசம்’ படமும் அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து அந்த படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ‘ரீமேக்’ செய்யப்பட்டு வெற்றி பெற்றன.

இதைத்தொடர்ந்து ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் உருவானது. மோகன்லால்-மீனா இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.

முதல் பாகத்தைப்போல் இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.