சினிமா செய்திகள்

3-வது முறையாக பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு + "||" + RK Selvamani re-elected Pepsi chairman for the 3rd time

3-வது முறையாக பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

3-வது முறையாக பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக 3-வது முறையாக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,

பெப்சி எனும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். அதன்படி வருகிற 2021-23ம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற பிப்.14-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணி மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட்டார். 

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியை தவிர்த்து யாரும் போட்டியிடாததால், தற்போது அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பொதுச்செயலாளராக அங்கமுத்து சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.