சினிமா செய்திகள்

மீண்டும் தொடங்குகிறது அண்ணாத்த படப்பிடிப்பு + "||" + Shooting begins again Annaatthe

மீண்டும் தொடங்குகிறது அண்ணாத்த படப்பிடிப்பு

மீண்டும் தொடங்குகிறது அண்ணாத்த படப்பிடிப்பு
அண்ணாத்த படப்பிடிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

ரஜினிகாந்த் பங்கேற்ற அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தபோது 4 பேர் கொரோனா தொற்றில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர். ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் சில நாட்கள் தனிமைப்படுத்தி ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். 

படப்பிடிப்புக்காக உடல்நிலையை கருதி ரஜினிகாந்த் மீண்டும் ஐதராபாத் செல்வது சிரமம் என்று கருதிய படக்குழுவினர் சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.