சினிமா செய்திகள்

அமெரிக்கா பயணம் ஹாலிவுட் படத்தில் நடிக்க செல்லும் தனுஷ் + "||" + Dhanush to travel to US to star in Hollywood movie

அமெரிக்கா பயணம் ஹாலிவுட் படத்தில் நடிக்க செல்லும் தனுஷ்

அமெரிக்கா பயணம் ஹாலிவுட் படத்தில் நடிக்க செல்லும் தனுஷ்
தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் நாளை (10-ந் தேதி) அமெரிக்கா செல்கிறார்.
தனுஷ் ‘தி க்ரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். ரயன் காஸ்லிங், கிரிஸ் ஈவான்ஸ் நடிக்கும் ரூஸோ சகோதரர்கள் இயக்கும் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் பணியாற்றுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் என்று தனுஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் நாளை (10-ந் தேதி) அமெரிக்கா செல்கிறார். அங்கு தங்கி இருந்து ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார். மே மாதம் வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்புகிறார். ஹாலிவுட் படத்தில் நடிக்க செல்லும் தனுசுக்கு நடிகர்-நடிகைகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.