சினிமா செய்திகள்

மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன் + "||" + MY THIS VIDEO VIRAL NOW BASICALLY THANKS TO Anikriti Chowhan (

மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன்

மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த  புகைப்படக்காரரை தாக்கிய மணமகன்
மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன் சினிமா விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது.
பிலாஸ்பூர்

மணமேடையில் தன்னை மட்டுமே வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை மணமகன் அடிப்பதை பார்த்து கீழே விழுந்து சிரிக்கும் மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது.

அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில் மணமகனும், மணமகளும் திருமணக்கோலத்தில் மணமேடையில் நின்றிருக்க அவர்களை போட்டோ எடுத்த புகைப்படக்காரர், மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததுடன், மணமகளின் கன்னத்தை பிடித்து போஸ் கொடுக்க கூறி உள்ளார்.

அப்பொழுது அருகிலிருந்த மணமகன் ஆத்திரம் அடைந்து  அந்த புகைப்படக்காரரை அடித்தது மட்டுமின்றி மணமேடையில் இருந்தே வெளியேறுமாறு கூறி உள்ளார்.  மணமகனின் இந்த செயலை பார்த்து சிறிதும், வருத்தமோ, கோபமோ கொள்ளாத மணமகள் தரையில் விழுந்து வாய்விட்டு சிரிக்கும்  வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.

திருமணக்கோலத்தில் மணமகனின் செயலால் கோபம் கொள்ளாமல் சிரிப்பை வெளிப்படுத்திய மணமகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். மணமகளின் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டது. மணமகன் அடித்ததும் போட்டோ எடுத்த புகைப்படக்காரரும் கோபம் கொள்ளாமல் சிரிப்பை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் அங்கு நடந்தது உண்மை திருமணமா அல்லது நாடகமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது.

அந்த வீடியோவில் இருக்கும் மணமகள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நடிகை அனிகிரிதி சவ்ஹான் . 'டார்லிங் பியார் சுகதா நஹி' என்ற திரைப்படத்தில் அனிகிரிதி நடித்து வரும் நிலையில், அதில் இடம்பெற்ற காட்சி ஒன்று தான் திருமணக்கோலத்தில் மணமகள் சிரிக்கும் வைரல் வீடியோ. இதனை உறுதிப்படுத்தியுள்ள அனிகிரிதி தனக்கு திருமணமாகவில்லை என்றும், திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி ரேணுகா மோகன் என்பவரால் பகிரப்பட்டு வைரலானதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி படப்பிடிப்பின் போதும், படக்குழுவினருடனும் எடுக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களையும் அனிகிரிதி பகிர்ந்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. நீருக்குள் ஜிம்னாஸ்டிக்; ரஷிய நீச்சல் அழகியின் வைரலாகும் வீடியோ
ரஷியாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
2. சீனாவில் காதலனை பழி வாங்க டெலிவரி கொடுக்கும் நபரை வைத்து காதலி செய்த செயல் - வீடியோ
சீனாவில் காதலனை பழி வாங்க காதலி டெலிவரி கொடுக்கும் நபரை வைத்து செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.