சினிமா செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகர் ராஜீவ் கபூர் மரணம் - பிரபலங்கள் இரங்கல் + "||" + Rajiv Kapoor passes away at 58

பிரபல பாலிவுட் நடிகர் ராஜீவ் கபூர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் ராஜீவ் கபூர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்
பிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 58.
மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் ராஜீவ் கபூர் (வயது 58).ரிஷி கபூர் மற்றும் ரந்தீர் கபூரின் தம்பி ராஜீவ் கபூர் ஆவார்.   தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர். ராஜீவ் கபூர் 'ராம் தேரி கங்கா மெய்லி' (1985) மற்றும் 'ஏக் ஜான் ஹைன் ஹம்' (1983) ஆகிய ப்டங்களின் மூலம் பிரபலமானார்.

சுக்ரியா, ஜபர்தஸ்த், லவ்வர் பாய், ஆஷ்மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ராஜீவ் கபூர் பிரேம்கிராந்த் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஒரு சில  படங்களை தயாரித்தும் உள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜீவ் கபூர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கரீஷ்மா கபூர், கரீனா கபூர் உள்ளிட்டோர் ராஜீவ் கபூர் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

ராஜீவ் கபூரின் சகோதரரும் பாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகருமான ரிஷிகபூர் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அவர் மரணமடைந்து ஒருவருடம் கூட ஆகாத நிலையில அவரது சகோதரரும் மறைந்திருப்பது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.