சினிமா செய்திகள்

பன்முக தன்மை நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டிய சிரஞ்சீவி + "||" + Chiranjeevi praises diversity actor Vijay Sethupathi

பன்முக தன்மை நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டிய சிரஞ்சீவி

பன்முக தன்மை நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டிய சிரஞ்சீவி
விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமின்றி இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் வேடங்களிலும் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமின்றி இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் வேடங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் குரூர வில்லனாக வந்தார். பிறமொழிகளில் நடிக்கவும் விஜய்சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிகின்றன. சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்தி படங்களிலும் நடிக்கிறார். உப்பென்னா என்ற இன்னொரு தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார். ஐதராபாத்தில் நடந்த உப்பென்னா பட விழா நிகழ்ச்சியில் சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசும்போது, “விஜய் சேதுபதி சிறந்த மனிதர். எளிமையானவர். அவரது அர்ப்பணிப்பு தன்மை அசாத்தியமானது. கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிப்பதில் வல்லவர். இந்தியாவின் பன்முக தன்மை கொண்ட நடிகராகவும் இருக்கிறார். கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று எப்போதுமே விஜய்சேதுபதி நிர்ப்பந்திப்பது இல்லை. சமீபத்தில் மாஸ்டர் படம் பார்த்தேன். அதில் விஜய்சேதுபதியின் பவானி கதாபாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது'' என்றார். நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசும்போது தன்னை பாராட்டிய சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்
நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
2. நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
3. விஜயுடன் நடித்த தனது முதல் படம் அனுபவம் குறித்து - நடிகை பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா தனது அனுபவ புத்தகத்தில் தான் நடிகர் விஜயுடன் தனது முதல் படம் அனுபவம் குறித்து எழுதி உள்ளார்.