சினிமா செய்திகள்

ஆபாச படங்களில் நடிக்க ரூ.20,000 சம்பளம் கொடுத்த நடிகை + "||" + The actress was paid Rs 20,000 to act in pornographic films

ஆபாச படங்களில் நடிக்க ரூ.20,000 சம்பளம் கொடுத்த நடிகை

ஆபாச படங்களில் நடிக்க ரூ.20,000 சம்பளம் கொடுத்த நடிகை
தமிழில் பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல இந்தி நடிகை கெஹனா வசிஸ்த் மும்பையில் தனி பங்களாவில் இளம் பெண்களை வைத்து ஆபாச படங்கள் தயாரித்ததாக கைதாகி இருக்கிறார்.
தமிழில் பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல இந்தி நடிகை கெஹனா வசிஸ்த் மும்பையில் தனி பங்களாவில் இளம் பெண்களை வைத்து ஆபாச படங்கள் தயாரித்ததாக கைதாகி இருக்கிறார். போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் நடிகைகளிடம் கெஹனா நைசாகி பேசி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளார். இதற்காக அவர்களுக்கு படம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்துள்ளார். 87 ஆபாச வீடியோக்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களை பார்க்க ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலித்துள்ளார். கெஹனாவின் 3 வங்கி கணக்குகளில் ரூ.36 ஆயிரம் உள்ளது. அந்த பணம் ஆபாச படங்களை பார்த்தவர்களிடம் இருந்து வங்கி கணக்குக்கு வந்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது’’ என்றார். ஆனால் கெஹனா தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கெஹனா அப்பாவி. கிளர்ச்சி ஏற்படுத்தும் வீடியோக்களை மட்டுமே அவர் தயாரித்தார். ஆபாச வீடியோக்களுக்கும், கிளர்ச்சி ஏற்படுத்தும் வீடியோக்களுக்கும் வித்தியாசம் உள்ளது. கோர்ட்டில் நிரபராதி என்று நிரூபிப்போம்'' என்று கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை
தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 40 வயதாகும் தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
2. ஒருதலை காதல்: நடிகையை கடத்த முயற்சி?
ஒருதலை காதல் காரணமாக நடிகையை கடத்த முயற்சி நடந்ததா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.