சினிமா செய்திகள்

'அண்ணாத்த' படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகும் ரஜினி + "||" + Rajini prepares again for 'Annatha' shooting

'அண்ணாத்த' படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகும் ரஜினி

'அண்ணாத்த' படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகும் ரஜினி
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 40 சதவீதம் முடித்து விட்டனர். ஊரடங்கை தளர்த்தியதும் கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 40 சதவீதம் முடித்து விட்டனர். ஊரடங்கை தளர்த்தியதும் கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்தனர். ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அரசியலுக்கு வரவும் மறுத்தார். தற்போது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்புக்கு ரஜினிகாந்த் தயாராகி இருக்கிறார். இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். வட மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சில முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் சிவா திட்டமிட்டு இருந்தார். அதனை ரத்து செய்து விட்டு மீதி உள்ள அனைத்து காட்சிகளையும் ஐதராபாத்திலும் சென்னையிலும் படமாக்க முடிவு செய்துள்ளார். அண்ணாத்த தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது. இந்த படத்தை முடித்து விட்டு ஏற்கனவே தன்னை வைத்து பேட்ட படத்தை எடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஆலோசிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது பேட்ட 2-ம் பாகமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா செல்லும் ரஜினி?
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
2. ‘‘சொந்த ஊருக்கு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்’’; ரஜினிக்காக காத்திருக்கும் புனே கிராம மக்கள்; பால்கே விருது கிடைத்ததற்காக மகிழ்ச்சி
ரஜினி சொந்த ஊருக்கு வருவதாக வாக்குறுதி அளித்ததாக கூறி அவருக்காக புனே கிராம மக்கள் காத்திருக்கிறார்கள். பால்கே விருது கிடைத்ததற்காக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
3. மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு; ரஜினி, நயன்தாரா நடித்த காட்சிகள் படமானது
கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றில் சிக்கியதால் படப்பிடிப்பை நிறுத்தினர்.
4. சென்னையில் தொடங்கியது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
5. மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் ரஜினி? - அண்ணாத்த படத்திற்கு பின் இணைவதாக தகவல்
நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.