சினிமா செய்திகள்

போயஸ் கார்டனில் புதுவீடு கட்டும் தனுஷ் பூமி பூஜையில் ரஜினி + "||" + Dhanush builds a new house Rajini in Bhoomi Pooja

போயஸ் கார்டனில் புதுவீடு கட்டும் தனுஷ் பூமி பூஜையில் ரஜினி

போயஸ் கார்டனில் புதுவீடு கட்டும் தனுஷ் பூமி பூஜையில் ரஜினி
ரஜினிகாந்தும் கொரோனா விதிமுறைகளுடன் முககவசம் அணிந்து தனது மனைவி லதாவுடன் பூமி பூஜையில் பங்கேற்றார்.
நடிகர் தனுஷ் சில மாதங்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டனில் பல கோடிக்கு இடம் வாங்கி இருப்பதாகவும், அங்கு வீடு கட்ட இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் பரவி வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (10-ந் தேதி) காலை அங்கு பூமி பூஜை நடந்தது. இதில் தனுஷ் குடும்பத்துடன் கலந்து கொண்டார். ரஜினிகாந்தும் கொரோனா விதிமுறைகளுடன் முக கவசம் அணிந்து தனது மனைவி லதாவுடன் பூமி பூஜையில் பங்கேற்றார்.

ஐதராபாத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பின் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். இந்த வீட்டை விரைவில் கட்டி முடித்து குடும்பத்துடன் குடியேற தனுஷ் திட்டமிட்டு உள்ளார். பூமி பூஜை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய இரு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்தியில் அந்த்ரங்கி ரே படத்திலும் நடித்துள்ளார். அடுத்து அவெஞ்சர்ஸ் என்ட் கேம் இயக்குனர்கள் அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இயக்கத்தில் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார்.