சினிமா செய்திகள்

கொரோனா சிகிச்சை: குணமடைந்த நடிகர் சூர்யா வீடு திரும்பினார் + "||" + Corona treatment: Recovered actor Surya returns home

கொரோனா சிகிச்சை: குணமடைந்த நடிகர் சூர்யா வீடு திரும்பினார்

கொரோனா சிகிச்சை: குணமடைந்த நடிகர் சூர்யா வீடு திரும்பினார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா குணமடைந்து வீடு திரும்பினார்.
சென்னை, 

நடிகர் சூர்யா கடந்த 7-ம் தேதி தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பிராத்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அவரது தம்பி நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அண்ணன் சூர்யா வீடு திரும்பிவிட்டார். எல்லோரும் நலமாக இருக்கிறோம். இன்னும் சில நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சூர்யா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று பதிவிட்டுள்ளார். 
தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுங்கள்-யூரியா தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
கொரோனா நோயாளிகள் தினமும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
2. கொரோனா சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் - இந்திய ரயில்வே துறை தகவல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
3. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
4. கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா வீடு திரும்பினார்
கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார்.
5. குமரியில் 86 பேருக்கு கொரோனா சிகிச்சை
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.