சினிமா செய்திகள்

வில்லிக்கு ஏற்பட்ட வில்லங்கம் ; சின்னத்திரை நடிகை ஷாமிலி போலீசில் புகார் + "||" + TV actress Shamili complains to police

வில்லிக்கு ஏற்பட்ட வில்லங்கம் ; சின்னத்திரை நடிகை ஷாமிலி போலீசில் புகார்

வில்லிக்கு ஏற்பட்ட வில்லங்கம்  ; சின்னத்திரை நடிகை ஷாமிலி  போலீசில் புகார்
வில்லிக்கு ஏற்பட்ட வில்லங்கம் ; சின்னத்திரை நடிகை ஷாமிலி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை

சின்னத்திரை நடிகை ஷாமிலி  இவர் சின்னத்திரையில் ரோஜா, தென்றல், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் சில திரைப்படத்திலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக, ஏராளமான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவதால், இன்ஸ்டா பக்கத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஷாமிலியை பின்தொடர்ந்தது வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களாக முன்பாக, ஷாமிலி சுகுமார் பெயரிலேயே போலியான கணக்கு ஒன்று இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்டு, அதில் ஷாமிலியை பற்றியும் அவருடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துகள் பகிரப்பட்டுள்ளது. மேலும், ஷாமிலி, இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இதனை பார்த்து அதிர்ந்து போன சின்னத்திரை நடிகை ஷாமிலி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நடிகை பலி
கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த பிரபல குணசித்திர நடிகை பலியானார்.
2. மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவில்லை
3. டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல்!
டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
4. 93 வது ஆஸ்கார் விருதுகள்...3 விருதுகளை வென்ற திரைப்படம் ; முழு விபரம்
93 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.
5. விடைபெற்றார் விவேக்: நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம்
நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.