சினிமா செய்திகள்

நடிகர் விஜயின் 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் போட்டோ ஷூட்டுடன் தொடக்கம் + "||" + actor Vijay's 65th film Start with a photo shoot

நடிகர் விஜயின் 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் போட்டோ ஷூட்டுடன் தொடக்கம்

நடிகர் விஜயின் 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் போட்டோ ஷூட்டுடன் தொடக்கம்
நடிகர் விஜயின் 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் போட்டோ ஷூட்டுடன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் பண்டியையொட்டி வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.

இது சென்னையில் உள்ள சன் குழுமத்தின் ஸ்டுடியோவில் நடந்துள்ளது. சன் நெட்வொர்க் ஊழியர்களுடன் நெல்சன் திலீப்குமார் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஒரு மாஸ் லுக் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதைப் பார்த்து இயக்குநரும் படக்குழுவினரும் திகைத்துப்போனதாகவும் கூறுகிறார்கள்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் ‘தளபதி 65’படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தன்னா ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நடிகை பலி
கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த பிரபல குணசித்திர நடிகை பலியானார்.
2. மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவில்லை
3. டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல்!
டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
4. 93 வது ஆஸ்கார் விருதுகள்...3 விருதுகளை வென்ற திரைப்படம் ; முழு விபரம்
93 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.
5. விடைபெற்றார் விவேக்: நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம்
நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.