சினிமா செய்திகள்

அதிரடி சண்டை காட்சிகளுடன் ‘செல்லப்பிள்ளை’யாக கவுதம் கார்த்திக் + "||" + Gautham Karthik acting Cellapillai film with action fight scenes

அதிரடி சண்டை காட்சிகளுடன் ‘செல்லப்பிள்ளை’யாக கவுதம் கார்த்திக்

அதிரடி சண்டை காட்சிகளுடன் ‘செல்லப்பிள்ளை’யாக கவுதம் கார்த்திக்
கவுதம் கார்த்திக் நடித்து வரும் 2 படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த படங்கள் முடிவடைந்ததும், அவர் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்துக்கு, ‘செல்லப்பிள்ளை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்காக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

 படத்தை பற்றி டைரக்டர் அருண் சந்திரன் கூறியதாவது:-

“இது மாஸ் கலந்த அதிரடி படம். கவுதம் கார்த்திக் அவருடைய தந்தை கார்த்திக் போலவே எந்த ஒரு கதாபாத்திரத்திலும் எளிதாக பொருந்தி விடுகிறார். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும்.

கவுதம் கார்த்திக் தனது தாத்தா முத்துராமன், அப்பா கார்த்திக் ஆகியோரின் ரசிகர்களால் செல்லப்பிள்ளையாக பார்க்கப்படுகிறார். அன்போடு நேசிக்கப்படுகிறார். அதை அடையாளப் படுத்தும் வகையில், படத்துக்கு ‘செல்லப்பிள்ளை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது”.